முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 26-வது லீக் ஆட்டம்: ஷிகர் தவான் அதிரடி விளாசலில் கொல்கத்தாவை வென்றது டெல்லி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தவானின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

உத்தப்பா 20 ரன்...

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் டென்லி, சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங் கினர். இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டென்லி, டக் அவுட் ஆனார். அடுத்து, சுப்மன் கில், உத்தப்பா ஜோடி சேர்ந்து அடித்து விளையாடினர். உத்தப்பா 30 பந்தில் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராணாவும் 11 ரன்னில் நடையைக் கட்டினார். சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் 34 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட் டிய அவர் 39 பந்துகளில் 65 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

ரஸல் அதிரடி...

பின்னர், அதிரடி மன்னன் ரஸல் வழக்கம் போல் சிக்சர்கள் விளாசிவிட்டு, 21 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் ரபாடா, கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் சாய்த்தார்.

தவான் அதிரடி...

பின்னர் டெல்லி அணி, களமிறங்கியது. பிருத்வி ஷா 14 ரன்னிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் ஒரு புறம் நிலைத்து நின்ற ஷிகர் தவானும் ரிஷாப் பன்ட்டும் அதிரடியில் ஈடுபட்டனர். ரிஷாப் 31 பந்தில் 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இங்க்ராம் வந்தார். அவரும் தவானும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து வென்றது. ஷிகர் தவான் 63 பந்துகளில் 97 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக் காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 4-வது வெற்றி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து