தி.மு.க. - காங். கூட்டணி நரகாசுர கூட்டணி அமைச்சர் ஜெயகுமார் காட்டமான பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      தமிழகம்
jayakumar 2019 02 02

சென்னை, தி.மு.க. கூட்டணி நரகாசுர கூட்டணி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடினார்.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சினிலும், தமிழினத்தை அழித்த துரோகிகள், தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் மத்திய அரசுக்கு தாரை வார்த்த நரகாசுர கூட்டணியை ஒழிப்பது தான் கடமையாக நிச்சயமாக இருக்கும். அதையே இன்றைக்குத் தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு தமிழனும் உணர்வார்கள். அதற்கேற்ற வகையில் நரகாசுரர்களும், அரக்கர்களும், தலைதூக்கா வண்ணம் வருங்காலம் நிச்சயம் இருக்கும்.

ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டது அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும். நாங்கள் எப்போதும் கொல்லைப்புற வழியைப் பின்பற்றுவது கிடையாது. பணத்தைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு கிடையாது. எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. திட்டங்கள் இருக்கிறது. தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கின்றது. எங்களுக்குக் கூட்டணி பலம் உள்ளது. வாக்கு வங்கி உள்ளது. பொதுமக்கள் முழுமையாக ஆதரவு தருகிறார்கள். இதுவே எங்கள் பலம் என்ற வகையில் அவர்கள் குறிப்பிடுவது போல சித்து விளையாடுவது எங்களுக்குப் பழக்கம் இல்லை. 40 உறுப்பினர்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தி.மு.க.வால் தாரைவார்க்கப்பட்ட உரிமைகள் எல்லாம் ஏற்கனவே மீட்டு எடுத்துள்ளோம். மீதி உள்ள உரிமைகளையும் மீட்டு எடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து