முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்–இ– முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.

அதன்படி முதல் கட்டமாக கடந்த 7–ந்தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாகிஸ்தானின் மாலிர் ஜெயிலில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. அவர்கள் ரெயில் மூலம் லாகூர் கொண்டுவரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் 15 -ம் தேதி (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து