முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த தேர்தல் முதலாளிகளுக்கும், விவசாயிகளுக்குமான தேர்தல்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, நடைபெறவுள்ள இந்த தேர்தல் முதலாளிகளுக்கும், விவசாயிகளுக்குமான தேர்தல் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் பா.ம.க இளைஞர் அணித்தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ்,திருப்பூர் அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளரான எம்.எஸ்.ஆனந்தனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பேசும்பொதுக்கூட்டம் பவானியில்நடைபெற்றது இக்கூட்டத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கேசி கருப்பண்ணன் தலைமை தாங்கினார். அண்புமணி ராமதாஸ், பேசும் போது,

சம்பந்தமே கிடையாது...

இங்கே ஆனந்தன் 39 - இடங்களை காட்டிலும் அதிக வாக்குகள வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நீலகிரி, ஈரோடு வெற்றி பெற வேண்டும். நம் தலைவர்கள் விவசாயிகளாக இருக்கின்றார். இந்த தேர்தல் முதலாளிகளுக்கு விவசாயிகளுக்காண தேர்தல். இந்த கூட்டணி விவசாய கூட்டணி.ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே கிடையாது. தி.மு.க. வினர் அழகு நிலையங்களை சூறையாடுகின்றனர்

சுவர் விளம்பரம்...

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காவிரி நதிநீர் ஆணையத்தை தடை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்க கூடியது என்றும் தி.மு.க. கூட்டணி அரசியல் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். இதில் திருமாவளவன் தனது தொகுதியான சிதம்பரம் பகுதியை விட்டு வெளியே சென்று பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்களுக்கு திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சுவர் விளம்பரம் கூட செய்யக் கூடாது என தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்

டோனி -மடுவு திட்டம் 50 ஆண்டு காலத்திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என போராட்டம் செய்தேன். டோனி - மடுவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். நம்ம கூட்டணி மக்களின் வாழ்வதாரத்தை பற்றி பேசும் கூட்டணி.சேலத்தில் ஸ்டாலின் தரக்குறைவாக தெருப் பேச்சாளராக கொச்சையாக பேசி வருகிறார். அவரது மகன் உதயநிதி அடுத்த தலைவர் என பேசி வருகிறார். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தி.மு.க.வில் உள்ளனர். தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை. தி.மு.க.-காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்  கூட்டணி என்பது மாநிலத்துக்கு மாநிலம் முரண்பாடான கூட்டணி. காவிரிக்கு துரோகம் செய்தது தி.மு.க.தான்.

400 டிஎம்சி தண்ணீர்...

காவிரி படுகையில் 45 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. கர்நாடகா 5 அணைகள் கட்டி104 டி.எம்.சி. தேக்கி கொண்டது. இது கருணாநிதி முதல்வராக இருந்த போது நடந்தது. தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. அனிதா மரணத்திற்கு காரணம் ராகுல் காந்தியும் ஸ்டாலின் தான். ஸ்டேர்லைட் ஆலையை திறந்து வைத்து விரிவாக்கம் செய்தது தி.மு.க. தான். இலங்கைக்கு கச்சத் தீவை விட்டுக் கொடுத்தது தி.மு.க.தான். இலங்கையில் முதலீடு செய்த  ஜெகத்ராட்சகனுக்கு சீட் வழங்கியது ஸ்டாலின்தான்.  திட்டத்தால் 5560 கோடியில் கோதாவரி - காவிரி திட்டத்தால் 400 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து