இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 வருடம் ஜெயில் - அபராதம்: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      தமிழகம்
election commission 2019 03 03

சென்னை, தமிழ்நாட்டில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

2019ம் ஆண்டு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காலை7 மணி முதல் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 16ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ் பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

பங்கேற்க - நடத்த...

தேர்தல் தொடர்பாக எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

சிறை - அபராதம்...

பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்க செயல்பாடு, பிற கேளிக்கைகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும், யாதொரு நபரும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126(2)ன் படி 2 ஆண்டுகள் சிறைஅல்லது அபராதம்,அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்டல அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கட்சிப்பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர், 16ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். 1951-ம் ஆண்டுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்126(1)(b)-ம் பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணிநேர கால அளவில் 16ம் தேதி மாலை 6 மணி முதல் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வுமுடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும் எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. 11-ம் தேதி காலை 7 மணி முதல் மே19 ம்தேதி மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து