முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அடுத்த மாதம், 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நீதிமன்ற வழக்கு காரணமாக, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின் கோவை மாவட்டம், சூலுார் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், மே, மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இத்தொகுதிகளில், வரும் 22-ம் தேதி மனு தாக்கல் துவங்குகிறது. தி.மு.க. சார்பில் நான்கு தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று பவுர்ணமி என்பதால், வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சூலுார் தவிர மற்ற தொகுதிகளுக்கு கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கப்பட்டு நேர்காணல் முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. அதே போல அ.ம.மு.க.வும், மற்ற கட்சிகளும் ஓரிரு நாளில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து