பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல்: தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவானது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு தகவல்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தமிழகம்
tamilnadu voting 2019 04 18

சென்னை : பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஆர்வத்துடன் வாக்களிப்பு...

பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடந்தது. அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மதுரையில் மட்டும்...

தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டோக்கன் கொடுக்கப்படும் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இடைத்தேர்தல்...

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன், கீழ விளாத்திகுளம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காந்தி, சொந்த ஊரான திருமங்கலக்கோட்டையில் வாக்குச் செலுத்தினார். புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இதற்கிடையே, மாலை 6 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

நாமக்கல்லில்...

6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு அறிவிக்கப்படும். தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. வாக்குச்சாவடியை கைப்பற்றிய சம்பவங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பார்லி. தேர்தல்...

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் வருமாறு:

வடசென்னை 61.46%, தென்சென்னை 58.14%, மத்திய சென்னை 57.05%, ஸ்ரீபெரும்புதூர் 60.39% நெல்லை 65.78%, கடலூர் 72.51% பொள்ளாச்சி 69.81% சேலம் 72.73%, தென்காசி 70.39% திருவண்ணாமலை 69.84% தர்மபுரி 73.45%, விழுப்புரம் 72.50% கன்னியாகுமரி 65.55%, தூத்துக்குடி 69.31% காஞ்சிபுரம் 67.52% அரக்கோணம் 72.86% கள்ளக்குறிச்சி 75.18% தஞ்சாவூர் 70.53%, திண்டுக்கல் 70.40%, மயிலாடுதுறை 71.20%, நீலகிரி 69.74%, சிவகங்கை 70.48%, தேனி 74.57%, ராமநாதபுரம் 67.70% பெரம்பலூர் 74.67%, கிருஷ்ணகிரி 72.79% திருச்சி 71.12%, விருதுநகர் 70.38%, கரூர் 75.84%, திருவள்ளூர் 70.46 ஆரணி 75.08% மதுரை 62% கோவை 63.81% நாகை 75.42% திருப்பூர் 63.18% சிதம்பரம் 76.07% நாமக்கல் 78% ஈரோடு 71.10%, மதுரை 60.12%.

இடைத்தேர்தல்...

இதேபோல், தமிழகத்தில் நடந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்:

பூந்தமல்லி-79.14%, பெரம்பூர்-61.06%, திருப்போரூர் - 81.05%, சோளிங்கர் - 79.63%, குடியாத்தம் - 81.79%, ஆம்பூர் - 76.35%, ஓசூர் - 71.29%, பாப்பிரெட்டிப்பட்டி - 83.31%, அரூர் - 86.96%, நிலக்கோட்டை - 85.50%, திருவாரூர் - 77.38%, தஞ்சாவூர் - 66.10%, மானாமதுரை - 71.22%, ஆண்டிப்பட்டி - 75.19%, பெரியகுளம் - 64.89%, சாத்தூர் - 60.87%, பரமக்குடி - 71.69%, விளாத்திக்குளம் - 78.06%.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பதிவான வாக்குகள், வருகிற மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து