யாரை ஆதரிப்பது: கட்சியா? மனைவியா? குழப்பத்தில் நடிகர் சத்ருகன் சின்ஹா

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Shatrughan Sinha 2019 03 23

புது டில்லி, உங்களுக்கு யார் முக்கியம். கட்சியா மனைவியா. இந்தக் குழப்பம் இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க.வில் இருந்த சத்ருகன், சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தார். இவரது மனைவி பூனம் சின்கா திடீரென சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத்தை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நிற்கிறார். இப்போது சத்ருகன் முன் எழுந்துள்ள கேள்வி, அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா அல்லது மனைவியை ஆதரிக்க வேண்டுமா என்பதுதான்.

பீகாரில் பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகனை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் சத்ருகன் மனைவிக்கு சமாஜ்வாடி தரப்பில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது கட்சியான காங்கிரசிற்குத்தான் சத்ருகன் ஆதரவு தர வேண்டும். மனைவியை மறந்து விட வேண்டும் என்று அக்கட்சியினர் கேட்கின்றனர்.

மனைவியை ஆதரிப்பது தவறு இல்லை. குடும்ப தலைவர் மற்றும் கணவர் என்ற முறையில் மனைவியை ஆதரித்து தான் ஆக வேண்டும். ஆனால் நான் எந்த காங்கிரஸ் வேட்பாளரையும் எதிர்த்து பிரசாரம் செய்ய மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார் சத்ருகன். ஆனாலும் சமாதானம் அடையாத காங்கிரசார் மனைவியின் வேட்பு மனு தாக்கல் ஊர்வலத்தில் சத்ருகன் கலந்து கொள்ள கூடாது என்று ராகுலிடம் முறையிடப்  போவதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து