மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளருக்கு முகேஷ் அம்பானி ஆதரவு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
ambani family 2018 11 29

Source: provided

மும்பை : மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

 காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி முரளி தியோரா. கடந்த 2014-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.

இவரது மகன் மிலிந்த் தியோரா. இவரும் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார். தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 42 வயதான மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

2004, 2009 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றார். 4-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ரிலையன்ஸ் குழும அதிபரான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:- தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். தெற்கு மும்பையில் உள்ள பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாக அறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வளம் பெறும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி வீடியோவில் கூறி தியோராவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து