முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, 38 பாராளுமன்றத்தொகுதிகளிலும் 71.90 சதவீதம் பதிவாகி இருப்பதாகவும் 18 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் 75.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில்...
 
தமிழகத்தில் பதிவான வாக்குசதவீதம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில்..
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 பாராளுமன்றத் தொகுதிகளிலும். 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.90 சதவீதம்வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் 80.49 சதவீதமும். குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவீதமும். வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் 75.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோளிங்கரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 82.26 சதவீத வாக்குகளும். குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.14 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்.வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம். ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர்நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லி இருக்கிறோம்.
திருப்பி தருவார்கள்...
 
தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பணம். நகைகள் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் வழங்கினால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திருப்பித் தருவார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ஒரிரு இடங்களில் சிறுசிறு பிரச்னைகளை தவிர சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை. வாக்காளர்கள்விடுபட்டதாக வந்த புகார்கள் குறித்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சிறப்பு அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும்.
24 மணி நேரமும்...
 
வேலூர் தொகுதியில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். அங்கு தேர்தல் கமிஷனால் வேட்பாளர்கள் தகுதியிழப்பு அறிவிக்கப்படாத சூழ்நிலையில்ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியிட தடை ஏதும் இல்லை. வரும் மே 23ம் தேதி 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
மேலும் அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: பறக்கும்படை சோதனை இனி 4 தொகுதிகளில் மட்டும் நடத்தப்படுமா அல்லது தமிழகம் முழுக்க நடத்தப்படுமா?
பதில்: அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்தப்படும். இது பற்றிய அதிகாரப்பூர்வ சிறப்பு அறிவிப்பு தேர்தல் கமி‌ஷனில் இருந்து பின்னர் வரும்.
கேள்வி: நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.
பதில்: பார்க்கலாம் இது பொதுவாக தவறுதான்.
கேள்வி: நகரப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளதே?
பதில்: வழக்கமாக நகரப் பகுதிகளில் ஓட்டுகள் குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். நகரப்பகுதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. அதனால் கூடுதலாக ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். பொது மக்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.
கேள்வி: பூத் சிலிப் கொண்டு செல்லாதவர்களை பல இடங்களில் ஓட்டுபோட அனுமதிக்கவில்லையே?
பதில்: பூத்சிலிப் இல்லாமல் அடையாள அட்டை எடுத்து சென்றவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை எடுத்து செல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து