முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 அவுரங்காபாத் : ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில்  வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து