4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      தமிழகம்
Anna Arivalayam-2019 04 19

Source: provided

சென்னை : திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது.   

அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.

திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,

மேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.

தெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,

வடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.

தெற்கு பகுதி-சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.

அவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.

அவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.

மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.

ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள்- திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன். 

தூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்.பி., கருங்குளம் வடக்கு- ஆஸ்டின் எம்.எல்.ஏ., திருவைகுண்டம் மேற்கு- கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முத்தையாபுரம் பகுதி- சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போல்பேட்டை பகுதி- சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.

அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

க.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.

சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.

சுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து