இந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
virat kohli interview 2019 02 25

Source: provided

புதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மிகவும் உதவிகரமாக...

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில மூத்த வீரர் எம்.எஸ்.டோனி சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டோனி அணியில் இருப்பது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசி உள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் டோனி தனக்கு மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார்.

முற்றிலும் அறிந்தவர்...

தொடர்ந்து பேசிய அவர், டோனி கிரிக்கெட்டை முற்றிலுமாக அறிந்தவர் என்றும் அவர் ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தையும புரிந்துக் கொள்ளக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் டோனி போன்ற விக்கெட் கீப்பர் அணியில் இருப்பது அதிர்ஷ்டம் என்றும் கோலி கூறி உள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து