டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
rohit sharma 2019 03 31

Source: provided

புதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

168 ரன்கள்...

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 26 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), ஹர்த்திக் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), குயின்டான் டி காக் 27 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, அக்‌சார் பட்டேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அபார வெற்றி

பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிகபட்சமாக 22 பந்தில் 35 ரன்னும், (5 பவுண்டரி, 1 சிக்சர்), அக்‌சார் பட்டேல் 26 ரன்னும் எடுத்தனர். ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், ஹார்த்திக் பாண்டியா, குருணால் பாண்டியா தலா 1 விக்கெட் எடுத்தனர். மும்பை அணி 6-வது வெற்றியை பெற்றது.

மிகவும் அபாரம்...

இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- முதல் 2 ஓவருக்கு பிறகு 140 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். எங்கள் அணியில் உள்ள அதிரடி பேட்ஸ்மேன்கள் ரன்னை உயர்த்தி விட்டனர். ராகுல் சாஹரின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பந்து வீச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. திட்டமிட்டப்படி அவர் பந்து வீசினார். அவர் கேப்டனின் நம்பிக்கையை பெற்ற பந்து வீச்சாளர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

4-வது தோல்வி...

டெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறும்போது, “டாஸ் தோற்றது துரதிருஷ்டமே. நாங்கள் அனைத்து நிலையிலும் தோல்வி அடைந்து விட்டோம். நாங்கள் கடைசி 3 ஓவரில் 50 ரன்களை கொடுத்தோம். இதுவே ஆட்டத்தை மாற்றி விட்டது. இதுதான் தோல்விக்கு காரணம்” என்றார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து