டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் !

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
rohit sharma 2019 02 06

Source: provided

புதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

சராசரி 32.20...

டெல்லிக்கு எதிரான  ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 30 ரன் எடுத்தார். 12-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்னை தொட்டார். 31 வயதான ரோகித் சர்மா 294 இன்னிங்சில 8,018 ரன் எடுத்து உள்ளார். சராசரி 32.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 133.36 ஆகும். 6 சதமும், 53 அரைசதமும் எடுத்து உள்ளார்.

3-வது இந்தியர்...

20 ஓவரில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 3-வது இந்தியர் ஆவார். ரெய்னா, கோலி ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். சர்வதேச அளவில் 8-வது வீரர் ஆவார். ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2331 ரன்னும், ஐபிஎல்-லில் 4716 ரன்னும் எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மற்ற ரன்களை எடுத்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து