வைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
marriage-2019 04 19

Source: provided

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அமுலுக்கு வந்தது...

நியூசிலாந்து நாட்டில் ஒரே பாலினத்தோர் திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் அனுமதி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பாலின திருமண மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததால் சட்டமாக்கப்பட்டு, அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் சட்டமாக அமலுக்கு வந்தது. நியூசிலாந்தில் அன்று முதல் பல ஒரு பாலின திருமணங்கள் நடந்துள்ளன.

ட்விட்டரில் வெளியீடு...

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் முதலிரண்டு சீசன்களில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக நிக்கோலா ஹான்காக் விளையாடினார். தற்போது, அவர் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து