பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
Sarfraz Ahmad-2019 04 19

Source: provided

லாகூர் : உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடமில்லை. விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அணிகள்...

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்பிராஸ் கேப்டன்...

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது விமர்சனத்திற்கு உள்ளாகி விளையாடாமல் இருந்து சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாக் .வீரர்கள்...

1. சர்பிராஸ் அகமது, 2. பகர் சமான், 3. இமாம்-உல்-ஹக் 4. பாபர் ஆசம், 5. சதாப் கான், 6. சோயிப் மாலிக், 7. பஹீம் அஷ்ரப், 8. ஷஹீன் அப்ரிடி, 9. ஹசன் அலி, 10. அபித் அலி, 11. முகமது ஹபீஸ், 12. இமாத் வாசிம், 13. ஜுனைத் கான், 14. முகமது ஹசைனைன், 15. ஹரிஸ் சோஹைல்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து