முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியைவிட தேவகவுடா சிறந்த பிரதமராக இருந்தார்- குமாரசாமி

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

ஹூப்ளி : மோடியை விட தனது தந்தை தேவகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.   

கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவகவுடா, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- எனது தந்தை தேவகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.  

தேவகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது? என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

தேவகவுடா ஆட்சியின் போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை. நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை.  

பாலக்கோட் விமான தாக்குதலை பாராளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். தேவகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து