பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் - மம்தா

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
Mamata Banerjee 2019 03 24

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என கிண்டலாக குறிப்பிட்டார்.   

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்.

இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என தெரிவித்தார். இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து