இன்று ஈஸ்டர் திருநாள் - தினகரன் வாழ்த்து

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
dinakaran 2019 04 20

சென்னை : ஈஸ்டர் திருநாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
துன்பங்களில் இருந்து இயேசு பெருமான் மீண்டெழுந்ததை ஈஸ்டர் திருநாளாக  கொண்டாடும் கிறித்துவ பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

40 நாட்களைத் தவக்காலமாக கடைபிடித்து புதிய நம்பிக்கையோடும்,  புதிய மகிழ்ச்சியோடும் கிறித்துவ சகோதர,  சகோதரிகள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். ‘எல்லோரிடத்திலும் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்’ என்ற இயேசுநாதரின்  மொழியை உலகில் அமைதி தவழ நினைக்கிற அனைவரும் விரும்புகிறார்கள். அந்த வழியில் அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம். எல்லா முனைகளிலும் வெறுப்பை அகற்றிடுவோம்.  பன்முகத் தன்மையைப் பாரம்பரிய சிறப்பாக கொண்டிருக்கிற  இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் உருவாகட்டும்.  ஈஸ்டர் திருநாள் அதற்கு வழி காணட்டும். இந்த நன்னாளில் கிறித்துவ மக்களுடைய நம்பிக்கை மெய்யாகி மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தினகரன் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து