முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல்: மாணவர்கள் 26-ம் தேதி வரை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ் -2 தேர்வு மதிப்பெண் பட்டியலை மாணவ, மாணவிகள் இணையத்தில் வரும் 26-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை செல்போனில் குறுஞ்செய்தி மூலமாகவும், இணையதளத்திலும் பார்த்து மாணவ, மாணவிகள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் தலைமை ஆசிரியர் வழியாக 20-ம் தேதி முதல் வருகிற 26-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் காலையில் இருந்து மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வாங்க ஆர்வமுடன் சென்றனர். பல பள்ளிகள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து