முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தாக்குதல் சம்பவம் : ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து