முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 மாநிலங்களில் 3-வது கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 117 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. அந்த தொகுதிகளில் நாளை 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் நாளை 23-ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. அன்று கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இந்த 3-வது கட்ட தேர்தலில் 1,600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் களம் காண்கிறார்.

3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. வாக்குப்பதிவு நாளை  23-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து