முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இன்று தாய், தங்கையுடன் ராகுல் காந்தி பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர். உ.பி.யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இராணியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து