மீண்டும் நடந்த பயங்கரம்: கொழும்புவில் நிகழ்ந்த 9-வது குண்டு வெடிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
sri-lanka-blasts 2019 04 22

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 9-வது குண்டு வெடிப்பு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். கொழும்பு நகரின் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர ஓட்டல்களிலும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்த போது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. வேனில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இதனை முன்னிட்டு அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது வெடித்துள்ளது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கொழும்பு நகரில் 9-வது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளனவா? என சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து