இலங்கை சம்பவத்தை காரணம் காட்டி காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      இந்தியா
PM Modi 2019 04 11

மும்பை : இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இவ்விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து பிரசாரம் செய்துள்ளார்.

மராட்டிய மாநிலம் திந்தோரியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய தெய்வத்தை வழிப்பட்ட போது கொல்லப்பட்டுள்ளனர். இதேபோன்ற சூழ்நிலைதான் இந்தியாவில் 2014-க்கு முன்னர் இருந்தது. தேசத்தில் எங்கோ ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட வண்ணம் இருந்தது என்று காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பிரதமர் மோடி, அவர்கள் வடிப்பது எல்லாம் போலி கண்ணீர் என குறிப்பிட்டார்.

மேலும் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதிலும், பாகிஸ்தான் பற்றி பேசி உலகம் முழுவதும் சென்று அழவும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போதைய காவலாளி பாகிஸ்தானுக்குள் சென்றே தாக்குதலை நடத்தியுள்ளார். அதன் பதிலாக பங்கரவாதம் ஜம்மு காஷ்மீரில் சில மாவட்டங்களுடன் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து