முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவிலில் மாறுவேட திருவிழா! பல்வேறு வேடங்களிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்!!

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியிலுள்ளஅருள்மிகு  புதுமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறுவிதமான மாறுவேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு  பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி, மெயின்ரோட்டில் 300ஆண்டுகால பழமைவாய்ந்த அருள்மிகு.புதுமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரைதிருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் டி.கல்லுப்பட்டி அருள்மிகு. புதுமாரியம்மன்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.இவ்விழாவின் முக்கியநிகழ்வாக நேற்று மாலை ஆயிரக் கணக்கான பக்தர்கள் பல்வேறுவேடங்களில் வந்து ஆடிப்பாடியபடி வீதிகளில் உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்திடும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுப்புற 48கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவலோக கடவுளர்கள்,பழங்கால அரசர்கள்,அசுரர்கள்,ராட்சதர்கள்,பேய்,பிசாசுகள்,அரக்கிகள், பிச்சைக்காரர்கள்,விபத்தில் கிடக்கும் பிணங்கள்,வெளிநாட்டு இன்னிசை குழுவினர் மற்றும் பெண்கள் போன்று வேடமிட்டு வீதிகளில் ஆடிப்பாடியபடி   ஊர்வலமாக வந்து புதுமாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
இதையடுத்து விழாவின் நிறைவாக மாட்டுவண்டியில் சீர்வரிசை சாமான்கள் ஏற்றப்பட்டு புதுப்பொண்ணு மாப்பிள்ளை வண்டி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது அலங்கார வண்டிகளில் பல்வேறு மேலோக நிகழ்வுகளை விளக்கிடும் கடவுளர்களது காட்சி,முனிவர்கள் தவம் செய்வது,இதிகாச நிகழ்வுகள் போன்ற காட்சிகளுடனான ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.அதன்பின்னர் கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய 500க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி சாமிதரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.பிறகு ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜைகள் மேற்கொண்டனர். குலசேகரபட்டினம் தசரா திருவிழா போல் நடைபெற்ற இந்த புதுமையான புதுமாரியம்மன் கோவில்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பக்தர்களின் மாறுவேடங்களை மகிழ்வுடன் ரசித்ததுடன் கோவிலில் வழிபாடும் நடத்திச் சென்றனர்.இந்த திருவிழாவின்போது டி.கல்லுப்பட்டியில் போக்குவரத்து நெரிசல் முழுமையாக ஏற்பட்டதால் போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து