முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார் ராகுல்காந்தி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அண்மையில் ரபேல் போர் விமான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி, தன் செயலுக்காக சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார்.

மீண்டும் விசாரணை

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

நீதிமன்றம் மறுப்பு...

பிரதமருக்கு எதிரான விமர்சனத்தை அடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி எம்.பியும் பா.ஜ.க. வைச் சேர்ந்தவருமான மீனாட்சி லெகி, சுப்ரீம் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. 

பிரமாணப்பத்திரம்...

இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே ரபேல் விவகாரத்தில் பிரதமர் குறித்து விமர்சனம் செய்தேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து