Idhayam Matrimony

தோகா ஆசிய தடகள போட்டி: இந்தியாவிற்கு 5 பதக்கங்கள்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

தோகா : ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அவினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல்நாளான நேற்று முன்தினம் பல்வேறு பிரிவுகளுக்கான ஓட்டப் பந்தயங்கள், ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் குதிரை ஓட்டம்), ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

எம்.பி.பூவம்மா

இதில், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாபிள், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதாரி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

டூட்டி சந்த்...

400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற ஹீமா தாஸ், பாதியிலேயே முதுகுவலி ஏற்பட்டதால் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற டூட்டி சந்த் தனது தேசிய சாதனையை முறியடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார். 23 வயதான டூட்டி சந்த், கடந்த ஆண்டு கவுகாத்தியில் நடந்த போட்டியின்போது 100 மீட்டர் ஓட்டத்தில் 11.29 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். இப்போது, 11.28 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 11.24 வினாடிகள் என்ற தகுதியை அவரால் எட்ட முடியவில்லை.

கோமதி...

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதி மாரிமுத்து, பந்தய தூரத்தை 2 நிமிடம் 4.96 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்களுக்கன டிரிபிள் ஜம்ப் போட்டியில், சித்திரவேல் 15.66 மீட்டர் உயரம் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து