முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய புள்ளியால் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் அபாயம் விஞ்ஞானி தகவல்.

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல் -  சூரிய புள்ளியால் சூரிய காந்தப்புயல் ஏற்பட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் அபாயம் விஞ்ஞானி தகவல்.

சூரியப் புள்ளிகள் பற்றி கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய சூரிய  இயல் விஞ்ஞானி டாக்டர் குமரவேல் கூறியதாவது. சூரியனை 1775 ஆம் ஆண்டுமுதல் நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு 11 ஆண்டும் ஒரு சோலார் சுழற்சி என்று கணக்கிடப்பட்டது. சூரியனில் சூரியப் புள்ளிகள் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். ஐந்தரை ஆண்டு முதல் இந்த சூரியப் புள்ளிகள் தோன்ற துவங்கி 11 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சூரியப் புள்ளிகள் குறைந்து பின்னர் சூரிய புள்ளிகளே  இல்லாமல் இருக்கும் .சூரியப் புள்ளிகள் ஏற்படுவதால் சூரிய காந்த தன்மை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த சூரிய காந்தப்புயல் அதிகரிக்கும் பொழுது பூமியிலுள்ள தொலை தொடர்பு சாதனங்கள் ,தொலைத்தொடர்புகள், அண்ட வெளியில் பரந்து கொண்டிருக்கின்ற செயற்கைக்கோள்கள் இவை அனைத்தும் பாதிக்கும் .தற்போது சூரியனில் சூரியப் புள்ளிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ளது. புள்ளி என்ற உடன் அது சாதாரணமான புள்ளி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது சூரியனில் தோன்றியுள்ள இந்த சூரிய புள்ளியின் அளவு பூமியைவிட 4 முதல் 5 மடங்கு பெரியதாகும். இந்த சூரிய புள்ளி பெரிதாகி மாற்றங்கள் அடையும் பொழுது சூரிய காந்த புயல்கள் பெரிய அளவில் அடிக்கடி தோன்றும் அபாயம் உள்ளது. இதனால் வரும் சில நாட்களில் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும். அதுபோல தொலைத்தொடர்பு சாதனங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .தற்போது தோன்றியுள்ள இந்த சூரிய புள்ளிகள் வரும் 2024 ஆம் ஆண்டு அதன் உச்சத்தை அடையும். தற்போது இருபத்தி ஐந்தாவது சோலார் சுழற்சி துவங்கி உள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை சூரியனில்  சூரியப் புள்ளிகள்  எதுவும்  இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சூரிய புள்ளி இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கலாம். சூரியன் ஒவ்வொரு நாளும் 13 டிகிரி அளவிற்கு சுழல்கின்றது. இன்னும் ஆறு தினங்கள் வரை இந்த பெரிய சூரிய புள்ளி நீடிக்கும். இது இன்னும் 13 நாட்களுக்கு தொடரலாம். சூரியன் மற்றும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், சூரிய புள்ளிகளால் ஏற்படும் சூரிய காந்த புயல்கள் இதன் தாக்கம் இவற்றைப் பற்றி கொடைக்கானல் வான் இயல் ஆராய்ச்சி நிலையத்தில் அதிநவீன கருவிகளைக் கொண்டு உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். தற்போது நிலவும் கடுமையான வெப்பத்திற்கும் சூரிய புள்ளிக்கும் சம்பந்தம் இல்லை. தற்போது பூமியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக வரும் இரு தினங்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து