முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 4 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

புதிய அறிவிப்பு...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் கடந்த 22.4.2019 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கீழ்க்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பின்வரும் தொகுதிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

மாவட்டங்கள்...

1. பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் - அரவக்குறிச்சி தொகுதி
2. திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் - ஒட்டப்பிடாரம் தொகுதி
3. கடலூர் மேற்கு மாவட்டம்  - சூலூர் தொகுதி
மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்குச் சென்று, தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து