முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை உழவு செய்ய விவசாய துறையினர் ஆலோசணை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண்மை அதிகாரி விவசாயிகளுக்கு ஆலோசணை தெரிவித்துள்ளார்.
              கோடை மழை
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தவாரம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கோடை உழவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கமுதி, கடலாடி வட்டாரங்களில் சென்ற வருடம் மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவின் தாக்குதல் இருந்தது. இதனைக் கட்டுப்படுத்த வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இனக் கவர்ச்சிபொறி, நுண் உயிர்பூஞ்சானங்கள் வழங்கப்பட்டு அதனை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் செய்துகாட்டப்பட்டது.
     கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீரை வீணாக் காமல் சேமிக்கலாம். மண்ணின் தன்மையை அதிகரித்து, காற்றோட்டம் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் வெளியில் கொண்டுவரப்படுவதால் அழிக்கப்படுகின்றன. படைப்புழுவின் கூட்டுப் புழுக்களும், முட்டைகளும் அழிகின்றன. களைச் செடிகள், இப்படைப்புழுவின் வாழ்வியல் சுழற்சிக்கு உறுதுணையாக உள்ளது. களைச் செடிகளின் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகின்றன.
                ஊடுபயிர்
           கோடையில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் வரப்புப் பயிராக செண்டுமல்லி, ஆமணக்கு ஆகிய பயிர்களை பொறிப் பயிர்களாகவும், தட்டைப் பயிரை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.எனவே விவசாயிகள் இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து