முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, ஆவணங்கள் வைக்கும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

    மதுரை,- திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்-2019 வருகின்ற மே-19  அன்று தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல்-22 முதல் தொடங்கப்பட்டு ஏப்ரல்-29 அன்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபடவுள்ளது. ஏப்ரல்-30ம் நாள் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு கடேசி நாளாக  மே-2 என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே-23 அன்று நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1,50,533 ஆண் வாக்காளர்கள், 1,53,918  பெண் வாக்காளர்கள் மற்றும் 27 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,04,478 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 103 இடங்களில் 297 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 88 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
 திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 23.04.2019 வரை நான்கு நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் அறை, ஆவணங்கள் வைக்கும் இடம் மற்றும் மனுத்தாக்கல் செய்பவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று (23.04.2019) பார்வையிடார்.
 மேலும், சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான தகவல்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிக்காக கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுகிறது. மாவட்ட தொடர்பு மையம் - சிறப்பு தொலைப்பேசி எண் : 1950   மூலம்   வாக்காளர்கள்   தங்களது   வாக்குச்சாவடி  விபரங்களை  அறிந்து கொள்ளலாம்.  மேலும், தேர்தல் கட்டுப்பாடு அறையின் கட்டணமில்லா தொலைப் பேசி எண்: 1800 425 8038 அல்லது தொலைப்பேசி எண்கள் : 2534035, 2534037, 2534038, 2534039 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம்.
 மதுரை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள், 36 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் தேர்தல் நடைமுறைகளைக் கண்காணித்திட களத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு  இன்று 24.04.2019 இரண்டு நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்  தி.பஞ்சவர்னம் ,  திருப்பரங்குன்றம் வட்டாட்சியர்  .நாகராஜன்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து