முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம்: பெங்களூரு அணியில் இருந்து தென்ஆப்ரிக்க வீரர் ஸ்டெயின் விலகல்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஸ்டெயின், தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார்.

கால் பாதத்தில்...

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்தார். அதனால் சுமார் ஒன்றரை வருடத்திற்கு மேல் விளையாடாமல் இருந்தார். அதன்பின் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.

மாற்று வீரராக...

தொடர் காயத்திற்குப்பின் சமீப காலமாக சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆர்சிபி அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கவுல்டர் நைல் விலகியதால் ஸ்டெயினை மாற்று வீரராக தேர்வு செய்தது ஆர்சிபி. அவர் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

தோள்பட்டையில்...

நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து