முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது அணியாக பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு நுழைந்தது; விருப்பம் நிறைவேறியதால் மகிழ்ச்சி: டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஐ.பி.எல். தொடர் தொடங்கும்போது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்து விட்டதால் திருப்தி என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

2-வது அணியாக...

ஐ.பி.எல். தொடரில் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. அந்த அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியே இருந்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று 2-வது அணியாக பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 6 வருடம் கழித்து அந்த அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

மிகவும் திருப்தியாக...

ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன் நாங்கள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளதால் மிகவும் திருப்தியாக உள்ளோம். பந்து வீச்சாளர்கள் அவர்களின் வேலைகளை சிறப்பாக செய்தது முக்கியமானது. அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் பேட்ஸ்மேன்களும் எந்தவிட இடர்பாடு இல்லாமல் அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து