முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாநில அளவிவல் 2-ம் இடம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-  பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு-2019 முடிவுகளின்படி, ராமநாதபுரம் மாவட்டம் 98.48சதவீதம் தேர்ச்சி சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து கலெக்;டர் வீரராகவராவ் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களை வாழ்த்தினார்.
ஆப்போது கலெக்;டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 2018-2019-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத் தேர்வு 14.03.2019 அன்று தொடங்கி 29.03.2019 வரை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 255 பள்ளிகளைச் சார்ந்த  8,240 மாணவர்கள்,  8,383 மாணவியர்கள் என மொத்தம் 16,623  மாணாக்கர்கள் தேர்வு எழுதினார்கள்.  பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான முடிவுகளின்படி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 8,081 மாணவர்களும், 8,289 மாணவியர்களும் என மொத்தம் 16,370 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்;ச்சி சதவீத அடிப்படையில் குறிப்பிடுகையில் மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி 98.07 சதவீதம் ஆகவும், மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி 98.88 சதவீதம் ஆகவும் என இராமநாதபுரம் மாவட்ட மாணவ,மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 98.48 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.  மாவட்டத்திலுள்ள 255 பள்ளிகளில் மொத்தம் 178 பள்ளிகள்; 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
  குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 131 அரசுப் பள்ளிகளில் மட்டும் கணக்கிடும்போது 94 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 5,757 மாணவ, மாணவியர்களில் 5,657 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வெழுதிய 62 மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களில் 58 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதற்காக சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், கடுமையாக உழைத்த மாணாக்கர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.   
  இந்நிகழ்வின் போது  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள்     டே.பிரேம் (ராமநாதபுரம்), டி.கே.பாலதண்டாயுதபாணி (மண்டபம்), கே.ராமர் (பரமக்குடி) ஆகியோர் உடனிருந்தனர்.
..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து