முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியாணிக்கு புகழ்பெற்ற திண்டுக்கல்லில் கோடை வெயிலை முன்னிட்டு பழைய சோறு வியாபாரம் அமோகம்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - ஒரு காலத்தில் திண்டுக்கல் என்றாலே அனைவரது நினைவிலும் வருவது திண்டுக்கல் பூட்டு தான். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாறி தற்பொழுது திண்டுக்கல் என்றாலே உணவு பிரியர்கள் அனைவரது நினைவிலும் வருவது பிரியாணி தான் என்ற நிலைமை தற்பொழுது உருவாகியுள்ளது
 பிரியாணிக்கு புகழ்பெற்ற திண்டுக்கலில் தரமான ஹோட்டல்களில் பழைய சோறு வியாபாரம் தற்போது களைகட்டியுள்ளது. வீடுகளில் சமைக்கக்கூடிய சாதம் மிச்சம் ஆகிவிட்டால் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இது காலம் காலமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து வரக்கூடிய தொன்று தொட்ட பழக்கமாகும் ஆனால் காலங்கள் மாற மாற மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகிறது பீட்சா பர்கர் பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதால் வீடுகளில் பழைய சோறு என்பது இல்லாத நிலைமை தற்பொழுது உருவாகி உள்ளது மேலும் கோடை காலங்களில் குளிர்ச்சி தரக்கூடியது என்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் தற்போது உள்ளது இந்நிலையில் வீடுகளில் கிடைத்துவந்த பழைய சோறு உணவு என்பது தற்பொழுது ஹோட்டல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் மிக விரைவில் ஜீரணம் ஆகக்கூடியதும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதும் ஆன பழைய சோறு தற்பொழுது திண்டுக்கல்லில் தரமான உணவு விடுதியில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது இதோடு மட்டுமல்லாமல் கம்பங்கூழும் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தான் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது பழைய சோறு மற்றும் கம்பங்கூழுக்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய், வத்தல், மோர் மிளகாய் போன்றவை சைட் டிஷ் ஆக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிட்டுக்கொண்டு கம்பங்கூழ் அல்லது பழைய சாதத்தையும் சாப்பிடும்பொழுது ஆனந்தமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் கம்பங்கூழ் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதனை அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது காரணம் சாலை ஓரத்தில் நின்று குடிப்பதற்கு சங்கோஜம். அதேபோல் சுத்தமற்ற முறையில் இருக்கும் என்பதால் அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது அதேநேரம் தற்பொழுது உள்ள பெண்களிடம் கம்பங்கூழ் தயார் செய்வது எப்படி என தெரியாததும் இதற்கு ஒரு காரணம் திண்டுக்கல்லில்  தரமான ஹோட்டலில் சுத்தமான முறையில் கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு விற்பனை செய்ப்படுவதை அறிந்து ஏராளமானோர் குடித்து உடலின் சூட்டைத் தணித்து பயன் பெற்று வருகின்றனர்
 மேலும் திண்டுக்கலில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் பிரியாணி அரிசி மசால் வகைகள் மற்றும் கறி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து அதன்பின் தம் வைக்கப்படுகிறது இந்த வகை பிரியாணி தான் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கடைகளிலும் தயார் செய்யப்படுகிறது  ஆனால் இந்தக் கடையில் மூங்கில் பிரியாணி, பனை ஓலை பிரியாணி என இரண்டு புது வகையான பிரியாணி தயார் செய்யப்படுகிறது பனை ஓலையில் சாப்பாட்டு இலையை வைத்து அதன் உள்ளே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணிக்கு தேவையான மசாலா வகைகள் வைத்து நீராவி மூலம் வேகவைக்கப்படுகிறது அப்போது இலை பனை ஓலைகளில் பிரியாணியுடன் ஒன்றாக நீராவி மூலம் வேக வைக்கப்படும் போது பிரியாணியின் தன்மையும் மாறிவிடுகிறது அதேபோல் பிரியாணி நல்ல சுவையாக இருக்கிறது  இதேபோல் மூங்கில் மரத்தின் நடுவே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணி தேவையான மசால் வைக்கப்பட்டு நீராவி மூலம் வேக வைத்துக் கொடுப்பதால் தம் பிரியாணியை விட இதன் சுவை நன்றாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து