முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே விவசாயிகளின் நிலங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று மண்மாதிரிகள் சேகரிப்பு

வெள்ளிக்கிழமை, 3 மே 2019      தேனி
Image Unavailable

போடி, -  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள ஆதிபட்டி கிராமத்தில் மூன்று மண்கண்டத்தில் மண்மாதிரிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரி பாய்; தலைமையில் அதிகாரிகள் சேகரித்தனர். வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) இளங்கோவன், போடிநாயக்கனூர் வேளாண்மை உதவி இயக்குநர் அமலா, வேளாண்மை அலுவலர்கள் போடி அம்பிகா, தேனி ஆகுடீலு, போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்டத்தின் சார்பில் வட்டார தொழில் நுட்ப மேலாளர், உதவி தொழில் நுட்ப மேலாளர் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.
  தமிழ்நாட்டில் இலவச மண்வள அட்டை திட்டம் 2015-16ஆம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இலவசமாக விவசாயிகளின் நிலத்திலேயே மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஆய்வறிக்கை 81.18 இலட்சம் தமிழ்நாடு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
  மண்ணின் வளமானது நிலத்திற்கு நிலம் மாறுபடும், ஆனால் விவசாயிகள் ஒரே மாதிரியான இரசாயன உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்வள ஆய்வறிக்கையின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான இரசாயன உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவு குறையும் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  இதன் அடிப்படையில் கடந்த நான்காண்டுகளில் மண்வளம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதனை கண்டறியவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட மண்மாதிரிகளை கூர்நோக்கி தரக்கட்டுபாடு கொண்டு வருவதற்கும், மேலும் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள உர பரிந்துரைகளை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பதற்காகவும், இந்த ஆண்டு மண்மாதிரிகள் எடுக்கும் பணி நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் கோடாங்கிபட்டி வருவாய் கிராமம், ஆதிபட்டி கிராமத்தில் மூன்று மண்கண்டத்தில் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டது. நீளம், அகலம், மற்றும் உயரம் முறையே தலா 50 செ.மீ அளவில் தோண்டப்பட்டு 25செ.மீ முதல் 50 செ.மீ.முடிய ஒரு மண்மாதிரியும் 0.செ.மீ முதல் 25 செ.மீ. வரை ஒரு மண்மாதிரியும் எடுக்கப்பட்டது. இவை அட்சரேகை மற்றும் தீர்த்தரேகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒரு கிலோ வீதம் மண்மாதிரி சேகரம் செய்யப்பட்டது. மேலும் மேல்பகுதியில் 10 மண்மாதிரிகள் எடுக்கப்பட்டது.
  இம்மண்பரிசோதனைகள் மண்பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டு மண்ணின் காரம், அமிலம், தழை, மணிசத்துகள் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் (இரும்பு, துத்தநாகம், கந்தகம் மற்றும் இதர சத்துகள்) கணக்கீடு செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் மண்வள வரைபடம் தயாரிக்கப்பட்டு கிராம அளவில் தேசிய தகவல் மையம் வலைதளத்தில் ஏற்றப்படும், இதனை தங்கள் பகுதி விவசாயிகள்;, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போடிநாயக்கனூர் வேளாண்மை உதவி இயக்குநர் அமலா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து