முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதியில் ராகுலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிருதி தோற்கடிப்பார்: பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டவட்டம்

திங்கட்கிழமை, 6 மே 2019      அரசியல்
Image Unavailable

லக்னோ, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணி தோற்கடிப்பார் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

ராகுல்காந்தி போட்டியிடும் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார். அமேதி தொகுதி நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதி இந்திராகாந்தி குடும்பத்திடம் உள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் வாரிசு அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மத்தியில் போட்டி நடக்கிறது. கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி நெருக்கடி கொடுத்ததால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே ராகுலால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இந்த முறை நிலைமை மாறுகிறது. ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகமாக பெற்று ஸ்மிருதி இராணி வெற்றி பெறுவது உறுதி. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளனர். இது எங்களுக்கு தேர்தல் வெற்றியை கொடுக்கும். வரும்  23-ம் தேதி நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து