முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 வயது மனிதர்போல் யோசிப்பது கடினம் : ரிஷப் பந்த் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2019      விளையாட்டு
Image Unavailable

எனக்கு 21 வயதே ஆகிறது, 30 வயது மனிதர்போல் யோசிப்பது கடினம் என்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். குறைந்த பந்தில் விரைவாக ரன்கள் சேர்க்கும் திறமையுள்ள இவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்கெட் கீப்பிங் திறமையில் தினேஷ் கார்த்திக் இவரை முந்தி விட்டார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.

தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் கடைசி வரை நின்று அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் போட்டியை முடித்து வைப்பது முக்கியமானது. தொடர்ச்சியாக இவ்வாறு செயல்பட கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிஷப் பந்த் கூறுகையில், போட்டியை பினிசிங் செய்வது முக்கியமானது. இந்த வேலையை தொடர்ச்சியாக செய்ய கற்றுக் கொண்டு வருகிறேன். உங்களுடைய அனுபவம் மற்றும் தவறுகளில் இருந்து மட்டுமே பாடம் கற்றுக் கொள்ள முடியும். ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. தற்போது எனக்கு 21 வயதே ஆகிறது. இந்த வயதில் 30 வயது மனிதர் போல் யோசிப்பது கடினம். எந்தவொரு விமர்சனங்களையும் நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய மனநிலை மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் நான் அதிக அளவில் முதிர்ச்சியடைய வேண்டியுள்ளது. அதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். அணிக்கு தேர்வாகாத போது அது பின்னடைவாக இருக்கும். எனக்கே அந்த அனுபவம் உள்ளது. ஆனால், தொழில் முறை வீரர்களுக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து