முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை போட்டி: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் விலகல்

புதன்கிழமை, 8 மே 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த மாதம் 23-ம் தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு அணிகளும் இந்த மாதம் 23-ம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஐ.சி.சி.-யின் ஒப்புதலுக்குப் பிறகே வீரர்களை மாற்ற முடியும்.

ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஜேஸன் பெஹ்ரென்டார்ஃப், ஆடம் ஸாம்பா, நாதன் லயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து