முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: 89 ரன் எடுத்து ஸ்மித் விளாசல்

புதன்கிழமை, 8 மே 2019      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத் தடை தற்போது முடிவடைந்ததால், உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து