முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

புதன்கிழமை, 8 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் -   கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவுப்படி கொடைக்கானல் ஏரி சாலை பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன .இதேபோல நேற்று லாஸ்காட் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டன .இதுபற்றி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் இந்த சாலையில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதை அடுத்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவுபடி கொடைக்கானல் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் அலுவலகம் அருகே லாஸ்காட் சாலை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதேபோல கல்லறை மேடு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதுபற்றி நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறியதாவது ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றினால்தான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க முடியும் .கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது உடன் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை  மற்றும் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  இவ்வாறு அவர் கூறினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து