முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 7 -வது கட்ட தேர்தலுக்காக உ.பி. மே.வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் மோடி பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் நேற்று 6-வது கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள 23 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன. பிரதமர் மோடி இந்த 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டங்களை தவிர மேலும் 10 பொதுக்கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் காசிப்பூர், ராபர்ஸ்ட் கஞ்ச், கோசி, சந்தலி, மிர்சாபூர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்காளத்தில் பசிர்கட், டைமண்ட் ஆர்பர், மதுராபூர், டம்டண்ட் ஆகிய இடங்களிலும் மோடி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.7-வது கட்ட தேர்தல் பிரசாரம் வரும் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது. தேவைப்பட்டால் மேலும் 5 இடங்களில் மோடியை பேச வைக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து