முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டியவை கலெக்டர் வீராகவராவ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜென்டுகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வேட்பாளர்கள்ஃவேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் உடனான முதற்கட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்;டர் தெரிவித்தாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 18.04.2019 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 வருகின்ற 23.05.2019 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையினை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும்.  அதேபோல, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃபரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்; பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். 
அதனடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மேசைகளுக்கு ஒரு முகவர் வீதம் தலா 14 முகவர்களும், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு முகவர் என மொத்தம் 15 முகவர்களை நியமித்திடலாம்.  இவ்வாறு நியமிக்கப்படும் முகவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரின் கையொப்பமிட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.  அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது முகவர்களுக்கான அடையாள அட்டையினை உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்து பெற்றிடலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.  அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முறையே பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி,  உதவி தேர்தல் அலுவலர்கள் எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர்-திருவாடானை தொகுதி), மரு.ஆர்.சுமன் (ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்-இராமநாதபுரம் தொகுதி), எஸ்.ராமன் (பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்-பரமக்குடி தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-முதுகுளத்தூர்), தி.சுப்பையா (அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்-அறந்தாங்கி தொகுதி), கார்த்திகைசெல்வி (தனித்துணை ஆட்சியர் முத்திரை-திருச்சுழி தொகுதி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான் உட்பட அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள்ஃவேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து