முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை நீடிக்கும்: பிளஸ்-1, பிளஸ்-2 மொழிப்பாடங்களை குறைக்கும் திட்டமில்லை - அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 11 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை நீடிக்கும் என்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் மொழிப்பாடங்களை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிகளில்...

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளதாக தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்தால் போதும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், மேலும் மேல்நிலை வகுப்புகளில் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன. அதே போன்று 9,10-ம் வகுப்புகளுக்கான மொழிப் பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இருப்பதை மாற்றி இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வழக்கம் போல்...

இந்தத் தகவலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த விளக்கம் வருமாறு:-

வரும் கல்வியாண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வழக்கம் போல் 6 பாடங்கள் இருக்கும். பாடங்களைக் குறைப்பது குறித்து எந்த விதமான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் ஆங்கிலம் தமிழ் என்ற இரு மொழிக்கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். எனவே மாணவர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேபோன்று பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்கள் என தற்போதுள்ள நிலையே தொடரும். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் எந்தவித குழப்பமும் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து