புளு மூன் பெயரில் புதிய விண்கலம் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      உலகம்
Blue Moon  new space 2019 05 12

துபாய், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனக்கு சொந்தமான அமெரிக்க விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய விண்கலத்தின் வடிவத்தை அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பத்திரிக்கையாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் நீல நிற பின்னணி ஒளியில் இந்த விண்கலத்தை ஜெப் பெசோஸ் அறிமுகம் செய்தார்.

புளு மூன் எனப்படும் இந்த விண்கலம், சந்திரனின் மேற்பரப்பிற்கு 6.5 டன் அளவில் பொருள்களை மிக பாதுகாப்பாக எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024-ல் இந்த விண்கலம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்கலாமா என்ற ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில் இது போன்ற விண்கலம், கூடுதல் வலுசேர்க்கும் எனவும் இந்த விண்கலம் மிகவும் புதுமையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கினறனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து