வடகொரியா ஏவுகணை அதிபர் டிரம்ப் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      உலகம்
trump 2019 02 20

வாஷிங்டன், வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளை நம்பிக்கை துரோகம் என கூற மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனிடையே, திடீரென பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் முன் வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாகவும் பின்னர் கடந்த பிப்ரவரியில் வியட்நாமில் 2-வது முறையாகவும் அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த 2-வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், வட கொரியா அண்மையில் ஏவுகணை சோதனைகள் நடத்தியதை நம்பிக்கை துரோகம் என்று கூற மாட்டேன். முதலில் நானும் அப்படிதான் நினைத்திருந்தேன். தற்போது அதனை நம்பிக்கை துரோகம் என்று சொல்வதற்கில்லை. இவை குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணையின் தரநிலை சோதனை. எனக்கும் கிம்முக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இது போன்ற தொடர் சோதனைகள், எதிர்காலத்தில் அவர் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யலாம். ஆனால், தற்போது அப்படி எதுவும் கிடையாது என்றார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து