புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு

திங்கட்கிழமை, 13 மே 2019      தமிழகம்
tn gov23-11-2018

Source: provided

 சென்னை : பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.   

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார். 

அதன்படி இன்று (நேற்று ) ரூ. 10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து