தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 மே 2019      தமிழகம்
Satyabrata Sahu  2019 03 31

சென்னை :  தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 27ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
19-ம் தேதி தேர்தல்...

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என மார்ச் 10-ம் தேதி அறிவித்ததை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவுற்றது. எனினும், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

27-ம் தேதி வரை...

அதனைத் தொடர்ந்து மேற்கண்டதேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி அன்று நடைபெறும் எனவும், தேர்தல் நடைமுறைகள் 27ம் தேதியுடன்  முடிவுக்கு வரும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை அதாவது 27ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள்நடைமுறையில் இருக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து